பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் பெயர் ‘கபாலி’ என நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் வயதான ‘தாதா’வாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். அவர் ரஜினிக்கு ஜோடியா என்பதும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.
படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடிக்கும் நடிகைக்கான தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் ‘அரவான், பரதேசி’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ள தன்ஷிகா தேர்வாகியுள்ளார்.
அடுத்த மாதம் மலேசியாவில் நடக்க உள்ள படப்பிடிப்பில் தன்ஷிகாவும் கலந்து கொள்ள உள்ளார்.