24ம் தேதி வெளியாகும் ‘கிருமி’…

ஜேபிஆர் பிலிம்ஸ் கோவை வழங்கும் படம் ‘கிருமி’. அனுசரண் இயக்கத்தில் கே இசையமைப்பில் ‘மதயானைக் கூட்டம்’ கதிர், ரேஷ்மி மேனன், சார்லி, வனிதா, தென்னவன், யோகி பாபு, டேவிட் சாலமன், தீனா, ‘நான்மகான் அல்ல’ மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம்.

ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள், மியூசிக் வீடியோக்களை இயக்கியுள்ள அனுசரண் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறியதாவது,

“இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் உருவாகியுள்ள படம். நல்ல வேலைக்காகக் காத்திருக்கும் கீழ்த் தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு திறமைசாலி இளைஞனுக்கு நடக்கும் சில சம்பவங்கள், அவன் கடந்து போகும் சில அத்தியாயங்கள்தான் படத்தின் கதை. வேலைக்குப் போகும் நாயகியும் நடுத்தர வர்க்கத்துப் பெண்தான்.

இன்று சமுதாயத்தில், இந்த அமைப்பில் பரவி இருக்கும் ஒரு பிரச்சினையைத்தான் நான் ‘கிருமி’ என்று குறிப்பிட்டுள்ளேன். அது என்னவென்று படம் பார்த்தால் புரியும். சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தத்துக்கு நெருக்கமான விதத்தில் படம் உருவாகி இருக்கிறது. நமக்கு நடப்பதைப் போல எல்லாரையும் உணர வைக்கும் கதையாக இப்படம் இருக்கும். தொழில்நுட்ப ரீதியிலும் நேர்த்தியான படமாக இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

ரஜினிகாந்திடம் உதவியாளராக இருந்த ஜெயராமன், தன் நண்பர்கள் கே. ஜெயராமன், எல்.பிருத்திவிராஜ், எஸ். ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

‘கிருமி’ அடுத்த வாரம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Read Previous

Puli – Song Promo

Read Next

Maya – Aayiram Aayiram – Promo Song – Video