விறுவிறுப்பான முன்பதிவில் ‘வேதாளம்’

ஸ்ரீ சாய்ராம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் ‘வேதாளம்’ திரைப்படம் நவம்பர் 10த் தேதி தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் வெளியாகிறது. அமெரிக்காவில் சுமார் 80 திரையரங்குகளிலும், யு.கே.வில் சுமார் 58 திரையரங்குகளிலும் இப்படம் திரையிடப்படுகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் திரையிடாத சில நாடுகளிலும் ‘வேதாளம்’ படம் முதல் முறை திரையிடப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் ‘வேதாளம்’ படத்திற்கான முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல் வாரத்திற்கான 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாம். முதல் வார முடிவிலேயே படம் பெரும்பான்மையான வசூலைக் குவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

விஜய் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

Read Next

மீண்டும் கமல்ஹாசனுடன் நடிக்கும் அமலா