144 – காமெடிக்கு ஏது தடை ?

144 என்றாலே தடை உத்தரவு என்றுதான் அனைவருக்கும் தெரியும். அதை ஒரு சென்டிமென்டாகக் கூடப் பார்க்காமல் ஒரு ‘கல கல காமெடி’ படத்திற்கு தைரியமாக ‘144’ என்று பெயர் வைத்து மதுரை ஏரியாவில் குதித்திருக்கிறார்கள்.

தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், கதைக் களங்களையும் கொண்ட படத்தைக் கொடுத்து வரும் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் மற்றும் அபி அன்ட் அபி தயாரிப்பில் 27ம் தேதி வெளிவர உள்ள படம் ‘144’.

சி.வி.குமார் தயாரிப்பில் உருவான சில படங்களில் கிராஃபிக்ஸ் வல்லுனராகப் பணியாற்றிய ஜி. மணிகண்டன் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல், எந்த குறும் படத்தையும் இயக்காமல் ‘144’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

மதுரை என்றாலே கலவர பூமியாகக் காட்டிய தமிழ் சினிமாவுக்கு மத்தியில் மதுரை ஒரு காமெடி பூமியும் கூட என்று ஒரு கற்பனை கிராமத்தை, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் கதை ஒன்றின் உரிமையை வாங்கி வித்தியாசமான படைப்பாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார்களாம்.

மிர்ச்சி சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், முண்டாசுப்பட்டி முனீஸ் காந்த் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தில் இரண்டு கிராமங்களுக்கு இடையேயான பிரச்சனையை வைத்து நகைச்சுவையான ஒரு படமாக தயாரித்திருக்கிறார்கள்.

சி.வி. குமார் தயாரிப்பில் வெளிவந்த ‘அட்டகத்தி, சூது கவ்வும், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை’ ஆகிய வித்தியாச வெற்றிப் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இடம் பிடிக்கும் என்கிறார்கள்.

படம் பார்க்கும் போது எந்தத் தடையும் இல்லாமல் தாராளமாகச் சிரிக்கலாம் என்கிறார்கள் படக் குழுவினர்.

Read Previous

144 gets U

Read Next

Radhamohan’s big offering