பொங்கல் தினத்தை முன்னிட்டு ‘தர்மதுரை’ படப்பிடிப்புத் தளத்தில் இன்று இரண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டது.
ஒரு விழா, அன்றைய ரஜினிகாந்த் படமான ‘தர்மதுரை’ படத்தின் 25வது ஆண்டு விழா, மற்றொரு விழா, இப்போதைய ‘தர்மதுரை’ படக்குழுவினரின் பொங்கல் விழா.
ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் பலர் நடிக்க விறுவிறுப்பாகத் தயாராகி வரும் படம் ‘தர்மதுரை’.
இப்படக் குழுவைச் சேர்ந்த 200 பேருக்கு படத் தயாரிப்பாளர் வேட்டி, சட்டை வாங்கிக் கொடுத்திருந்தார். அதை அணிந்து கொண்டு அனைவருமே இன்று படப்பிடிப்புத் தளத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினார்கள்.
அதோடு ரஜினிகாந்த் நடித்த ‘தர்மதுரை’ படத்தின் 25வது ஆண்டு விழாவையும் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.
இயக்குனர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி, தமன்னா, ஒளிப்பதிவாளர் சுகுமார் உட்பட படக் குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர்.