அறிவுத் தீவிரவாதம் பற்றிச் சொல்லும் ‘ஆகம்’

ஆந்திராவில் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர் அயல்நாடு வாழ் இந்தியரான கோட்டீஸ்வர ராஜு, அவரது மனைவி ஹேமா ராஜு இருவரும் சேர்ந்து ஜ்யோ ஸ்டார் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் படம் ‘ஆகம்’.

இர்ஃபான், தீக்ஷிதா , ஜெயப்பிரகாஷ் , ஒய்.ஜி.மகேந்திரன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். (ஆகம் என்றால் வந்தடைதல் என்று பொருள்)

‘ஒரு சிறகு போதும்’ என்ற நூலை எழுதியவரும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறைகள் பல நடத்தியவருமான டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இந்தப் படத்தை கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.
.
நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் பேசியதாவது,

“இந்தியாவின் அறிவை அன்னிய நாடுகள் சுரண்டும் அறிவுத் தீவிரவாதம் பற்றி பேசும் படம் இது .

வெளிநாடு சென்று வாழ்வதுதான் வாழ்க்கை என்று என்னும் ஒரு அண்ணன். தான் மட்டுமல்ல, இந்தியாவில் இருந்து யாரும் வெளிநாட்டு வேலைக்குப் போகக் கூடாது என்று எண்ணும் தம்பி. இவர்களுக்கு இடையேயான குடும்பப் பிரச்னை, எப்படி ஒரு நாட்டின் பிரச்சினையானது என்பதுதான் இந்தப் படம்.

கதையைக் கேட்ட உடன் படம் தயாரிப்பதற்கான பட்ஜெட் போட்டுக் கொண்டு வந்தார் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு. இசையமைப்பாளர் விஷால் சந்திர சேகர் சிறப்பான பாடல்கள் மட்டுமல்லாது அற்புதமான பின்னணி இசையும் கொடுத்துள்ளார்.

ஒரு மணி நேரம் 57 நிமிடம் ஓடும் இந்தப் படம் ஏராளமான சுவையான திருப்பங்களோடு உங்களை செல் போனை நோண்ட விடாமல் வேடிக்கை பார்க்க விடாமல் கட்டிப் போடும், சீட்டின் நுனியில் உட்கார்ந்து மொத்தப் படத்தையும் பார்ப்பீர்கள்,” என்றார்

“ஆகம் படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வருகிறது. நல்ல கருத்து சொல்கிற வெற்றிப் படங்களை தொடர்ந்து எடுப்போம்,” என்றார் இப்படத்தின் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜூ.

நிகழ்ச்சியில் அபிராமி ராமநாதன், வி.ஜி. சந்தோஷம், படக் கதாநாயகன் இர்பான், ஜெயப்பிரகாஷ், தீக்சிதா, ரியாஸ் கான் , ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலரும் பேசினர்.

Read Previous

Ghibran to work with C V Kumar

Read Next

What next for Jothika ?