‘குற்றப் பரம்பரை’ கோலாகல ஆரம்பம்

மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கும் ‘குற்றப் பரம்பரை’ படம் நேற்று மதுரை, உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் விமரிசையாக நடைபெற்றது.

குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.

இயக்குனர்கள் சுசிந்திரன், பாண்டிராஜ், பேரரசு, ஜீவன், கதிர், பிரவீன்காந்த், எழில், SS ஸ்டான்லி, சரவண சுப்பையா, மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் கண்ணன், பாடலாசிரியர்கள் நா.முத்துகுமார், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

Read Previous

‘தோழா’வுக்குப் பாராட்டு மழை, நாகார்ஜுனா மகிழ்ச்சி

Read Next

சென்னை 28 – இரண்டாம் பாகம் ஆரம்பம்