‘தேவி’ – செப்டம்பர் 9 ரிலீஸ்…

பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கணேஷ், பிரபுதேவா இணைந்து தயாரிக்கும் படம் ‘தேவி’.

விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு, அடுத்த மாதம் நடைபெற உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரவுதேவா தமிழில் நடிக்கும் படம் என்பதாலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

“தேவி’ படத்தை மேலும் மெருகேற்றும் அனைத்து இறுதிக்கட்ட வேலைகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மும்மொழி திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிடுவது என்பது சற்று கடினமான காரியம் தான். இருந்தாலும் எங்களின் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒற்றுமையால் அதை நாங்கள் வெகு சிறப்பாக செய்து வருகிறோம். இந்த வருடத்தின் சிறப்பான நாளான 9.9.2016 அன்று எங்கள் ‘தேவி’ படத்தை வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்” என படத்தின் இயக்குனர் விஜய் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Read Previous

Kabali collections – First weekend

Read Next

Saithan is a psycho thriller