இது ‘பாகுபலி’ அல்ல – ‘காஷ்மோரா’ பற்றி கார்த்தி

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் மற்றும் பலர் நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, இயக்குனர் கோகுல், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், படத் தொகுப்பாளர் சாபு ஜோசப், கலை இயக்குனர் ராஜீவன், விஎஃப்எக்ஸ் ஸ்டாலின், நடிகர்கள் கார்த்தி, விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி ,“இந்தப் படம் பாகுபலி அல்ல,” என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுப் பேசினார்.

“இந்தப் படம் ஒரு என்டர்டெயினர்தான், ஜாலியான ஒரு படம், இதுல நாங்க பரீட்சார்த்த முயற்சிகள் எதுவும் பண்ணலை. அந்த என்டர்டெயின்மென்டை எவ்வளவு பெருசா, கிராண்டா கொடுக்க முடியுமோ அதை நாங்க டிரை பண்ணியிருக்கோம்.

கோகுல் சார் ஆரம்பத்துல இருந்தே அருமையா வொர்க் பண்ணாரு. என்ன ஷுட் பண்ணமோ அது ஸ்கிரீன்ல இருக்கு. அது ரொம்ப பெரிய விஷயம். நிறைய படங்கள்ல நிறைய ஷுட் பண்ணுவோம், அப்புறம் கட் பண்ணி தூக்கிப் போடுவோம். அப்படியில்லாம, என்ன பிளான் பண்ணமோ, அதை கரெக்டா ஷுட் பண்ணி, கரெக்டா வச்சிருக்கோம்.

படத்துல கோகுல் சாருக்கே உண்டான காமெடி அவ்வளவு இருக்கு. ஒரு 60 சதவீதம் இது காமெடிப் படமும் கூட. தயவு செய்து டிரைலரைப் பார்த்துட்டு ஒரு பாகுபலி படம்னு நினைச்சி வந்துடாதீங்க. நானும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிறேன். இது பாகுபலி அல்ல.

இது ஒரு ஜாலியான படம், நீங்க எதிர்பார்க்கிற ஜாலியான பல விஷயங்கள் இந்தப் படத்துல இருக்கும்,” என்றார் கார்த்தி.

Read Previous

Udhayanidhi Stalin’s next is progressing

Read Next

Vishnu Vishal praise Soori