8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக அருமைச்சந்திரன் தயாரிப்பில் தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள ‘பறந்து செல்ல வா’ படத்தை கலைப்புலி இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் நடிகர் நாசரின் மகன் லுத்புதீன் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முற்றிலும் சிங்கப்பூரிலேயே தயாராகியுள்ள இந்தப் படம் காதல், நகைச்சுவை கலந்த ஒரு படம்.
படத்தைப் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, அனைவரும் ரசிக்கும்படியாக வித்தியாசமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை தானே வெளிட முடிவு செய்துள்ளார்.
அடுத்த வாரம் டிசம்பர் 9ம் தேதி இப்படம் வெளியாகிறது.