பிரமிக்க வைக்கும் கதையுடன் ‘பீச்சாங்கை’

கர்ஸா என்டர்டைன்மெண்ட் சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் பிஜி மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் படம் ‘பீச்சாங்கை’.

புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் நாயகன், நாயகியாக நடிக்க எம்எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

“அறிமுக கலைஞர்கள் திரையுலகில் வெற்றி காண்பது என்பது சற்று சவாலான காரியம் தான். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் தரமான படங்களுக்கும், திறமையான கலைஞர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருக்கின்றது. அந்த வகையில் அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்து, எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக எங்களின் பீச்சாங்கை படம் இருக்கும்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பீச்சாங்கை படத்தின் கதாநாயகன் கார்த்திக்.

இப்படத்தின் டிரைலருக்கு யு டியூபில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இடது கை பழக்கம் கொண்ட கதாநாயகனுக்கு, பின்னர் அவன் நினைப்பதை அவனது இடது கை செய்யாமல் மாறாக செய்ய ஆரம்பித்திருக்கிறது. இப்படி கற்பனைக்கு எட்டாத ஒரு கதையைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

Read Previous

The Life Of Power Paandi – Vaanam (Official Video)

Read Next

மண்டியிட்டு நன்றி கூறிய அஜய் கோஷ்