‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் பாகம் ஏற்படுத்திய தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
இன்றைய இளம் தலைமுறையினர் மட்டும் அல்லாமல் பலரும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளமான ‘ஃபேஸ்புக்’கில் ‘பாகுபலி’ கதாபாத்திரங்களின் பெயர்களில் யாரோ குறும்புக்காரர்கள் கணக்குகளை ஆரம்பித்துள்ளார்கள்.
படத்தில் உயிரோடு இருப்பவர்களைத் தவிர இறந்து போன கதாபாத்திரங்களின் பெயரிலும் அவர்கள் கணக்குகளை ஆரம்பித்திருப்பதுதான் குறும்புத்தனத்தின் உச்சம்.
அது மட்டுமல்லாமல் தங்களைப் பற்றிய விவரங்களாக அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
எந்த ஒரு விஷயம் மக்களைக் கவர்ந்தாலும் அதை வைத்து ‘காமெடி’ செய்வதில் நம் ஆட்களை மிஞ்ச வேறு யாருமில்லை.