‘2.0’ டீசர், டிரைலர் வெளியீடு தள்ளி வைப்பு ?

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஷங்கர் இயக்கும் ‘2.0’ படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் துபாயில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அடுத்ததாக இந்த மாதம் ஹைதராபாத்தில் டீசர் வெளியீடும், அடுத்த மாதம் சென்னையில் டிரைலர் வெளியீடும் முன்னர் அறிவித்தபடி நடக்க வாய்ப்பில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்திற்கான கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் முடிவடைய தாமதம் ஆவதால், படத்தின் வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருக்கும் என்கிறார்கள். அதனால், டீசர், டிரைலர் வெளியீட்டையும் படத்தின் வெளியீடு பற்றி உறுதியாகத் தெரிந்த பின் நடத்தலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எனவே, ‘2.0’ படம் முன்னர் அறிவித்தபடி ஜனவரி, 25, 2018 அன்று வெளியாகாது என்றே தெரிகிறது.

Read Previous

‘அறம்’ இயக்குனரின் பெயர் தெரியாத பா. ரஞ்சித்

Read Next

தமிழ் சினிமாவில் வந்த டிஜிட்டல் தொழில்நுட்பம்