காலா படத்தின் டப்பிங் ஆரம்பம்

ரஜினிகாந்த் நடிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படம் காலா.

இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். கபாலி திரைப்படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் – பா.ரஞ்சித்  இணையும் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைப் பெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது.

இன்று நடைப்பெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார்.

காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் ‘கலகலப்பு 2’

Read Next

சினிமாவிற்கு பேய் பிடித்திருக்கிறது – இயக்குனர் பேரரசு