C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் ‘செயல்’.
இப்படத்தில் ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
“இந்தப் படத்திற்காக கேரளாவில் பாபா பாஸ்கர் நடன அமைப்பில் ராஜன் தேஜேஸ்வர், தருஷி இருவரும் பங்கு பெற்ற “நீயா உயிரே உயிர் தேடும் உயிர் நீயா” என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சாலக்குடி, வாகாமன் போன்ற அடர்ந்த காடுகளில் மிகவும் சிரமப்பட்டு இந்த பாடல் காட்சியை படமாக்கினோம்.
சென்னையில் “டே மாமா விட்டுத் தள்ளு இதுக்கேன்டா இவ்வளவு டல்லு” என்ற முழுக்க முழுக்க சென்னையைப் பற்றிய பாடலுக்கு ராஜன் தேஜேஸ்வர் மற்றும் அவரது நண்பரான ஆத்தியா கோபி மற்ற நண்பர்கள் பங்கு பெற பாபா பாஸ்கர் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது,” என்கிறார் இயக்குனர் ரவி அப்புலு.
படம் விரைவில் வெளியாக உள்ளது.