7 சி என்டர்டெயின்மென்ட் ஆறுமுககுமார் மற்றும் அம்மே நாராயணா என்டர்டெயின்மென்ட் கணேஷ் காளிமுத்து, ரமேஷ் காளிமுத்து ஆகியோர் தயாரிப்பில் ஆறுமுககுமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்தின் சிங்கிள் பாடலான ‘என் எலும்பை எண்ணி’ பாடலும் வெளியிடப்பட்டது. அடுத்து படத்தின் இசையை வரும் 6ம் தேதி வெளியிட உள்ளார்கள்.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் சார்பில் மலேசியாவில் நடைபெற உள்ள நட்சத்திர விழாவில் அனைத்து நட்சத்திரங்களின் முன்னிலையில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ இசை வெளியீடு நடைபெற உள்ளது.
இசை நிகழ்ச்சியில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். படத்தின் டீசர், சிங்கிள் பாடல் எப்படி வித்தியாசமாக இருந்து, அனைவரின் வரவேற்பைப் பெற்றதோ, அதே போல படத்தின் பாடல்களும் வித்தியாசமாக அமைந்து வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஜனவரி மாதத்தில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் வெளியாக உள்ளது.