விமல்-ஐத் தேடி வந்த 5 புதுப் பட வாய்ப்புகள்

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியானது. குடும்ப உறவுகளின் மேன்மையை கலகலப்பான பொழுபோக்கு அம்சங்களுடன் சொன்ன இந்தப் படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

இப்போதும் சுமார் 50 தியேட்டர்களில் ‘மன்னர் வகையறா’ ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனால் அளவற்ற மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் இருக்கிறார் விமல்

“மன்னர் வகையறா’ படம் நிச்சயம் எனக்கு வெற்றிப்படமாக அமையும். அதன்பின் தான் புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்,” என்று சொல்லி அப்படத்திற்காக ற்கு தனது முழு உழைப்பயும் தந்து காத்திருந்தார் விமல். அவரது காத்திருப்பு வீண்போகவில்லை.

‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து புதிதாக விமல் 5 படங்களில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

‘வெற்றிவேல்’ படத்தை இயக்கிய வசந்தமணி, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் அசோக், குறும்பட இயக்குனர் விஜய் உட்பட இன்னும் இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ளார்.

சற்குணம் டைரக்சனில் ‘K 2’ படத்தின் படப்பிடிப்பும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னி ராசி’ படம் வரும் மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

இதன் மூலம் இந்த ஆண்டில் விமல் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து வர உள்ளது.

Read Previous

நாகேஷ் திரையரங்கம் – டிரைலர்

Read Next

வெளியில் வந்த ‘காலா’ சண்டை