வெளியில் வந்த ‘காலா’ சண்டை

மொபைல் போன்கள் வந்த பிறகு முழு திரைப்படங்களே பைரசியாக சுலபமாக வெளிவந்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களில் கூட அந்தப் படங்களை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். இதைத் தடுக்க முடியாமல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களும் திணறி வருகிறார்கள். தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சில இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சில படங்களின் காட்சிகள் படங்கள் வெளிவருவதற்கு முன்பே எடிட்டிங் அறையில் இருந்து திருட்டுத் தனமாக லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. அந்த விதத்தில் ‘காலா’ படத்தில் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ள சண்டைக் காட்சி ஒன்று லீக் ஆகியுள்ளது. அது படப்பிடிப்பு நடக்கும் போதே படம் பிடிக்கப்பட்ட ஒன்றா அல்லது எடிட்டிங்கின் போது படம் பிடிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இது போன்ற திருட்டு வீடியோக்கள் வெளியாவது இதற்கு முன்பும் நடைபெற்றுள்ளது. ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் அறிமுகக் காட்சி கூட படம் வெளிவருவதற்கு முன்பே வெளியானது. இப்போது ‘காலா’ படத்திலும் அது நடந்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் அவருடன் பணி புரிபவர்கள் மீது இன்னும் அதிகமான கவனத்தில் இருக்க வேண்டிய நேரம் இது.

Read Previous

விமல்-ஐத் தேடி வந்த 5 புதுப் பட வாய்ப்புகள்

Read Next

நடந்தது என்ன ? அமலா பால் விளக்கம்