‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகர் வசந்த் ரவி.
இவர் அடுத்து அருண் மாதேஷ்வரன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.
ரா ஸ்டுடியோஸ் சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் இது.
இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், ‘இறுதிச் சுற்று’ படத்தின் வசனங்களை எழுதியவர். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தில் இடம் பெற உள்ள ஒவ்வொரு சண்டைக் காட்சியையும், ஒவ்வொரு வகையான சண்டை அமைப்புடன் தினேஷ் சுப்பராயன் அமைக்க உள்ளாராம்.
மற்ற நடிக, நடிகையருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.