ஜெயராம், அஸ்வின் நடிப்பில், அறிமுக இயக்குநர் நாகேந்திர முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் நியூஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், படப்பிடிப்புத் தளத்தின் சுவாரசியமான தருணங்கள் இடம்பெற்றுள்ள BTS வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
சாய் வினோத் ஜெயக்குமார் வழங்க, மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களை மையமாகக் கொண்ட குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்கு இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்.
ஜெயராம், அஸ்வின் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் மூலம் கல்யாணி அனில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாஃபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவு வீடியோவில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் மகிழ்ச்சியான தருணங்கள், படப்பிடிப்பின்போது நடைபெற்ற சுவாரசியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
பிரவீன்குமார் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைத்துள்ளார். ஷெரிப் மாஸ்டர் நடன அமைப்பையும், ஜெய்முருகன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். அர்ஜுன் பாபு படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தயாரிப்பாளர் சாய் வினோத் ஜெயக்குமார் மற்றும் இணைத் தயாரிப்பாளர் சாய் பிரபு ஜெயக்குமார்.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாகப் படத்தொகுப்பு உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற உள்ளன. படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.