ஆன்ட்ரியா நாயகியாக நடிக்கும் ‘கா’

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது ‘பொட்டு’ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். இப் படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து ‘கா’ என்ற படத்தைத் தயாரிக்க உள்ளார்கள். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் ஆன்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘கா’ என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் ‘கா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரே நாளில் நடக்கும் த்ரில்லர் கதை இது. அறிமுக இயக்குனர் நாஞ்சில் இப்படத்தை இயக்குகிறார். அம்ரிஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

Read Previous

‘காலா’ – இசை வெளியீடு மே 9ம் தேதி

Read Next

தியா – விமர்சனம்