மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நாடோடிகள் 2’ படம் உருவாகி வருகிறது.
சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். அதுல்யா, பரணி, எம்.எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்.
யுகபாரதி எழுதி ஜஸ்டின்பிரபாகரன் இசையமைத்துள்ள ஒரு பாடல் காட்சி, பல லட்சம் ரூபாய் செலவில் மதுரையில் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில வாரங்களில் நிறைவடைய உள்ளது.