‘காலா’ பார்க்க சென்னை வந்துள்ள ஜப்பான் ரசிகர்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் ஜுன் 7ம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜப்பான் நாட்டிலும் சில நகரங்களில் வெளியாகிறது.

‘முத்து’ படம் ஜப்பான் நாட்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றதிலிருந்து ரஜினிக்கு ஜப்பான் நாட்டிலும் பல ரசிகர்கள் உள்ளனர்.

அவர்களில் குறிப்பிட வேண்டிய ஒரு ரசிகர் யசுதா. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யசுதா, ரஜினியின் மிகத் தீவிரமான ஒரு ரசிகர்.

ஜப்பான் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினராக இருக்கும் யசுதா ‘காலா’ படத்தைப் பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார். ஜப்பானிலிருந்து சென்னை வந்து ‘கபாலி’ படத்தைப் பார்த்து ரசித்தவர் இவர்.

இன்று சென்னையில் உள்ள காசி தியேட்டருக்குச் சென்று ‘காலா’ படத்தின் டிஷர்ட்டுகள் மற்றும் சில ‘காலா’ வியாபாரப் பொருட்களை வாங்கினார்.

ஜுன் 7ம் தேதியன்று வெளியாக உள்ள ‘காலா’ படத்தைப் பார்க்க சென்னை வந்துள்ளதாகவும், தமிழில் பேசியுள்ளார். அவருடைய பேச்சை கீழே உள்ள வீடியோவில் பார்க்கவும்…

https://twitter.com/kasi_theatre/status/1003974207418478592

Read Previous

கர்நாடகாவில் ‘காலா’ தியேட்டர்களுக்கு பாதுகாப்பு, நீதிமன்றம் உத்தரவு

Read Next

என் கிட்ட 1000 கோடி இருக்கு – சிம்பு ஓபன் பேச்சு