‘காலா’ முதல் நாள் வசூல் 40 கோடி ?

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

தமிழ்நாட்டில் 440 தியேட்டர்கள், அமெரிக்காவில் 300 தியேட்டர்கள் என உலகம் முழுவதும சுமார் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியானது.

முதல் நாளில் இந்தப் படம் சுமார் 40 கோடி வசூலித்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் 15 கோடி, அமெரிக்காவில் 5 கோடி, ஆந்திரா, தெலுங்கானாவில் 5 கோடி, கேரளாவில் 1.5 கோடி, வட இந்தியாவில் 3 கோடி, உலகின் மற்ற இடங்களில் சுமார் 10 கோடி என சுமார் 40 கோடி வரை வசூலித்துள்ளது என்கிறார்கள்.

இது எதிர்பார்க்கப்பட்ட வசூலை விட குறைவு என்றும் ஒரு தகவல் இருக்கிறது.

‘கபாலி’ படம் முதல் நா‘காலா’ முதல் நாள் வசூல் 40 கோடி ?

‘கபாலி’ படம் முதல் நாளில் 53 கோடியை வசூலித்துள்ளது. அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ‘கபாலி’ வசூலை மிஞ்சும் அளவிற்கு ‘காலா’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினிகாந்த்தின் தூத்துக்குடி பயணத்தின் போது பத்திரிகையாளர்களைச சந்தித்து தமிழர்களைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் தமிழர்களின் மனதில் ரஜினி மீது ஒரு எதிர்ப்பு அலையை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படத்தைப் பார்க்க பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் முதல் நாளில் ஓரளவிற்கு ஓபனிங் இருந்தாலும் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான ‘காலா’வுக்கு பெரிய வசூல் இல்லையாம்.

முதல் வார இறுதிக்குள் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தாலும் படத்தின் உண்மையான வெற்றி என்பது வரும் திங்கள் கிழமைதான் தெரியும்.

படம் பற்றி இரு விதமான விமர்சனங்கள் வருவதால் அது படத்தின் வசூலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.ளில் 53 கோடியை வசூலித்துள்ளது. அந்தப் படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ‘கபாலி’ வசூலை மிஞ்சும் அளவிற்கு ‘காலா’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரஜினிகாந்த்தின் தூத்துக்குடி பயணத்தின் போது பத்திரிகையாளர்களைச சந்தித்து தமிழர்களைப் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் தமிழர்களின் மனதில் ரஜினி மீது ஒரு எதிர்ப்பு அலையை உருவாக்கியிருக்கிறது. அதனால்தான், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படத்தைப் பார்க்க பெரிய ஆர்வத்தைக் காட்டவில்லை என்றும் சொல்கிறார்கள்.

தமிழ், தெலுங்கில் முதல் நாளில் ஓரளவிற்கு ஓபனிங் இருந்தாலும் ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான ‘காலா’வுக்கு பெரிய வசூல் இல்லையாம்.

முதல் வார இறுதிக்குள் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்தாலும் படத்தின் உண்மையான வெற்றி என்பது வரும் திங்கள் கிழமைதான் தெரியும்.

படம் பற்றி இரு விதமான விமர்சனங்கள் வருவதால் அது படத்தின் வசூலை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

Read Previous

‘கோலி சோடா 2’ – இயல்பான இன்பவல்லி சுபிக்ஷா

Read Next

‘விஸ்வரூபம் 2’ டிரைலர் ஜுன் 11ம் தேதி வெளியீடு