யுவி கிரியேஷன்ஸ் சார்பாக வம்சி மற்றும் பிரமோத் இணைந்து தயாரிக்க சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் – ஸ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘சாஹோ’.
வித்தியாசமான நாயகனாக பிரபாஸ் நடிக்க, வில்லனாக அருண் விஜய் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அபுதாபியில் நடந்து வருகிறது. அபுதாபி அரசரின் சிறப்பு அனுமதி பெற்று இப் படத்திற்காக பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள்.
ஒரே ஷெட்யுலாக 20 நாட்கள் எடுக்கப்படும் இந்த சண்டைக் காட்சிக்காக பாலைவனத்தில் சுட்டெரிக்கும் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒளிப்பதிவாளர் மதியின் ஆறு கேமரா செட்டப்பில், 37 கார்களையும், 5 ட்ரக்குகளையும் பிரபாஸ் அடித்து நொறுக்கும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகிறது ‘சாஹோ’.