பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் தனுஷ், கிருஷ்ணா, டொவினோ தாமஸ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் தற்போது நடிகை வித்யாவும் இணைந்துள்ளார்.
‘சைவம்’ படத்தில் அறிமுகமான வித்யா, ‘பசங்க 2, இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
தற்போது ‘அசுரகுலம், தலைகால் புரியலை, களரி, ஒத்தைக்கு ஒத்தை, தடம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், ‘மாரி 2’ படத்தில் நேற்று முதல் இணைந்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.
‘மாரி 2’ படத்தில் இணைந்து நடிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள வித்யா, படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான தனுஷ், இயக்குனர் பாலாஜி மோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.