[post_gallery]
2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா வழங்க, பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.
இப்படம் குடும்பங்கள் மற்றும் தாய்மார்களின் பேராதரவோடு அனைத்து சென்டர்களிலும் வெற்றிநடை போட்டுவருகிறது.
வெகுநாட்களுக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் படைப்பாக இப்படம் வந்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வசூலைத் தந்து வருகிறது.
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக படத்தின் விநியோகஸ்தகர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், நாயகன் கார்த்தி, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோரைச் சந்தித்து அவர்களுக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.
படத்தை குடும்பங்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், துணை குடியரசுத் தலைவர் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.