ஆர்யா நடிக்கும் ‘மகா முனி’

2011ம் ஆண்டு வெளிவந்த ‘மௌன குரு’ படத்தை இயக்கியவர் சாந்தகுமார். அந்தப் படம் வித்தியாசமான படம் என அனைவரின் பாராட்டையும் பெற்றது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு அவருடைய இரண்டாவது படத்தை இயக்க உள்ளார்.

‘மகா முனி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கேஈ ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ‘கஜினிகாந்த்’ படத்திற்குப் பிறகு அந்த நிறுவனத்தில் ஆர்யா நடிக்கும் இரண்டாவது படம் இது.

கதாநாயகிகளாக மகிமா நம்பியார், இந்துஜா நடிக்கிறார்கள். மற்றும் ஜுனியர் பாலையா, ஜெயப்ரகாஷ், அருள்தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

அதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் இயக்குநார் சாந்தகுமார், நாயகன் ஆர்யா, நாயகி இந்துஜா, ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ், எடிட்டர் VJ சாபு ஜோசப் உள்ளிட்ட படக்குழுவினரும், தொழில்நுட்ப கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் நடிகர் கௌதம் கார்த்திக் ,இயக்குநர்கள் M.ராஜேஷ், சந்தோஷ் P ஜெயக்குமார், ஹரிகுமார் (தேள்), தயாரிப்பாளர்கள் 2D என்டெர்டெயின்மென்ட் ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், மதன்(எஸ்கேப் ஆர்டிஸ்ட்), சக்திவேலன்.B(சக்தி பிலிம் பேக்டரி) ஆகியோரும் போது கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படம் பற்றி இயக்குனர் சாந்தகுமார் கூறுகையில்,

“க்ரைம் திரில்லர் ஜேனரில் ‘மகாமுனி ’ தயாராகிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.

Read Previous

ஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

Read Next

காற்றின் மொழி – விமர்சனம்