ஜோதிகா நடிக்கும் புதிய படம் ஆரம்பம்

நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின் ஜோதிகா மீண்டும் நடிக்க வந்தார்.

“36 வயதினிலே, மகளிர் மட்டும்” ஆகிய படங்களில் நடித்தார். அடுத்து அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ நாளை மறுநாள் நவம்பர் 16ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்திற்கு அடுத்து ஜோதிகா நடிக்க உள்ள படத்தை அறிமுக இயக்குனர் ராஜ் இயக்குகிறார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த வார இறுதியில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பெரடி, கவிதாபாரதி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சூர்யா நடிக்கும் ‘நந்தகோபால குமரன்’ படத்திற்குப் பிறகு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரகாஷ், எஸ்ஆர் பிரபு இப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

Read Previous

ரஜினிகாந்த், அஜித்துடன் மோதல் – சிம்பு அறிவிப்பு

Read Next

ஆர்யா நடிக்கும் ‘மகா முனி’