புதிய படத்தில் ஜோதிகா, ரேவதி

ஜோதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தை ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார். ரேவதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜோதிகா, ரேவதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை சூர்யா கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் சூர்யா, ஜோதிகா, ரேவதி, நடிகர்கள் ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், இயக்குநர் பிரம்மா, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்ஆர் பிரபு, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், படத்தின் இயக்குநர் கல்யாண் மற்றும் படக் குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி” ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் படம் இது.

காமெடிப் படமாக உருவாக உள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கல்யாண். இந்தப் படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை வீர சமர் கவனிக்க, எடிட்டிர் விஜய் படத்தை தொகுக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது.

ஜோதிகா அறிமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஆசிரியையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது.

Read Previous

வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்

Read Next

ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி