ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி

‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஆனால், அது பற்றி உறுதியான தகவல் வராமல் இருந்தது. கதை முடிவாகவில்லை, ரஜினிகாந்த் சம்பளம் முடிவாகவில்லை, மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று மட்டுமே தகவல்கள் வெளியாகின.

இப்போது படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் மூலம் ரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தளபதி’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சார் படத்திற்கு பணியாற்றப் போவது மிகவும் உற்சாகமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

படத்தின் இசையமைப்பாளர் யார், நாயகிகள் யார் என்பது குறித்து ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்புகள் வரலாம்.

தற்போதைய தகவலின்படி படம் மார்ச் மாதம் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

https://twitter.com/santoshsivan/status/1094684352527638528

Read Previous

புதிய படத்தில் ஜோதிகா, ரேவதி

Read Next

‘கள்ளபார்ட்’ ஏப்ரல் மாதம் திரையில்…

Most Popular