புதிய திரைப்படங்களை, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன என்ற குரலுடன் கேட்டு டிவியில் பார்த்துப் பழகியவர்கள் நாம்.
ஆனால், இனி வரும் காலங்களில் டிவிக்கு முன்பாகவே அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ 5, சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் என மொபைல் திரைப்படத் தளங்களில் பார்க்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது.
சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜனவரி 10ம் தேதி வெளிவந்து வசூலில் பெரும் சாதனை படைத்து ஓடிய படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமை பல கோடிக்கு அமேசான் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.
அந்தப் படத்தை படம் வெளியான 45வது நாளில் அமேசான் பிரைம் அதன் மொபைல் தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அதற்காக நள்ளிரவில் ஆங்கிலத்தில் ஒரு கவிதைக் குறிப்புடன் ‘விஸ்வாசம்’ வெளியீட்டை அறிவித்துள்ளது.
டிவிக்கு முன்பாகவே ‘விஸ்வாசம்’ படம் மொபைல் தளத்தில் வெளிவந்துள்ளது ஆச்சரியம்தான். சன் டிவி இந்தப் படத்தை பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
roses are red,
sweet as payasam,
we couldn't come up with the third line,
so here we releasing viswasam— prime video IN (@PrimeVideoIN) February 24, 2019