சாருஹாசன் – 87 வயதில் ஒரு கதாநாயகன்

கலை சினிமாஸ் தயாரிப்பில் விஜய்ஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தாதா 87’ படம் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் 87 வயதான சாருஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், ஆனந்த் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

உலக சினிமா அரங்கில் ஹாலிவுட் நடிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் அவரது 88ம் வயதில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு 87 முதியவர் கதையின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள் பெருமை ‘தாதா 87’ திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது.

“Ageing Superstar” என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் சாருஹாசன் தில்லான தாதாவாக இப்படத்தில் வலம் வருகிறார்.

இப்படத்தின் டீசரும் டிரைலரும் இந்தப் படம் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.

Read Previous

‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள் தட்டிச் சென்ற கோப்பை

Read Next

ரஜினி, கமல் கூட்டணி – விஷால் விருப்பம்