கார்த்தி தற்போது ‘மாநகரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்து தன்னுடைய 19வது படமாக ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகியாக தெலுங்குப் படமான ‘கீதா கோவிந்தம்’ பட நாயகி ராஷ்மிகா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது. விவேக் மெர்வின் படத்திற்கு இசையைமக்கிறார்கள்.
இப்பத்தில் யோகி பாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.
எமோஷன், ஆக்ஷன் கலந்த காமெடி கதையாக உருவாகும் இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு தயாரிக்கிறார்கள்.