‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ – ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியம்

கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் P.K. ராம் மோகன் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த், அதுல்யா ரவி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’

இப்படம் பற்றி இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறுகையில்,

‘மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் இயக்குனர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன்.

ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்கள், அவர்களை இயக்கும் போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் இருந்தது. இருப்பினும், அத்தகைய தவறான கருத்துக்களை படப்பிடிப்பில் தூள் தூளாக்கி விட்டனர். அவர்கள் நடிப்பில் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினார்கள், ஒரு சிறிய ஆலோசனையோ அல்லது மாற்றங்களையோ கூட என்னிடம் சொல்லவில்லை.

விக்ராந்த் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு நடிகர் என்பதை பல நேரங்களில் நான் உணர்ந்திருக்கிறேன். தற்போது நல்ல நல்ல படங்கள் அவர் கைவசம் உள்ளன. அவரது நடிப்பு நிச்சயம் அனைவராலும் மிகவும் பாராட்டப்படும். அதுல்யா ரவி தனது நடிப்பில் ஒரு யதார்த்தமான தன்மையைக் கொடுக்கும் ஒரு அரிதான நடிகை. இந்த படத்தில் நடித்த அத்தனை பேருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமான விஷயங்களைக் கொண்ட த்ரில்லர் படமாகவும் மற்றும் உணர்வுபூர்வமான படமாகவும் இந்தப் படம் இருக்கும்,” என்கிறார் இயக்குனர்.

ஜுன் 14ம் தேதி சுட்டுப் பிடிக்க உத்தரவு வெளியாகிறது.

Read Previous

கொலைகாரன் – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

Read Next

எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்‘