அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி பிள்ளை தயாரிப்பில் எழில் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஈஷா ரெபா மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
சதீஷ், ஆனந்தராஜ், சாம்ஸ், நிகிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், கோவை சரளா, மதுமிதா, ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், வையாபுரி, வெண்பா, மனோபாலா, சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
ரஜினிகாந்த் நடித்து 1978ல் வெளிவந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் பெயரை 41 வருடங்கள் கழித்து மீண்டும் வைத்திருக்கிறார்கள்.
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி, 1, சென்னை 28 – 2ம் பாகம், இது நம்ம ஆளும் காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன்’ உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வருகிறார்.
முதல் படமாக ‘சொல்லாமலே’ துவங்கி, ‘பிச்சைகாரன்’ வரை பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி வி பிரகாஷ் குமார் நடிக்க ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து இந்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.
‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ போன்ற வெற்றிப் படங்களைத் தந்த இயக்குனர் எழில், இந்த முறை ஒரு வித்தியாசமான திகில் கதையை, அவருக்கே உரிய பாணியில் படமாக்கி வருகீறார்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனுக்கு, வெளி நாட்டில் பேய் பிடித்த ஒரு நபரிடம் இருந்து, பேயை விரட்ட வேண்டும் என்ற சவாலான வேலை வருகிறது. அந்த சவாலான வேலையை ஏற்றுக்கொண்ட ஹீரோ, பேயை விரட்டி அந்த நபரை காப்பாற்றினாரா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
யூகே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை கோபி கிருஷ்ணா கவனிக்கிறார்.
சத்யா இசையமைக்க, யுகபாரதி, விவேக், ராகேஷ், கருங்குயில் கணேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். கதை, வசனத்தை எ முருகன் எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.