விஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்

தமிழ் சினிமாவின் தற்போதைய முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

2015ல் அவர் நடித்து வெளிவந்த ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அடுத்து விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க உள்ள படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.

இப்படத்தை விக்ராந்த் அண்ணனான சஞ்சீவ் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு, விக்ராந்த் நடித்த ‘தாக்க தாக்க’ படத்தை இயக்கியவர்.

யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுஜாதா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆனந்த் ஜாய் தயாரிக்கிறார்.

வீழ்வது தவறில்லை, வீழ்ந்தே இருப்பதுதான்….என்ற டேக் லைனுடன் இப்படத்தின் முதல் பார்வையை இன்று வெளியிட்டுள்ளார்கள்.

விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Read Previous

ஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்

Read Next

தமிழ் சினிமா – ஜுன் 21, 2019 வெளியாகும் படங்கள்…