ஜெயம் ரவி நடிக்கும் 25வது படம் ஆரம்பம்

‘ஜெயம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ரவி, அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.

2003ல் அறிமுகமாகி 2019ல் 25வது படத்தைத் தொட்டுள்ளார் ஜெயம் ரவி. அவரின் 25வது படத்தை ‘ரோமியோ ஜுலியட், போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமண் இயக்க உள்ளார்.

படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்க உள்ளார். ரோனித் ராய், சரண்யா, தம்பி ராமையா, ராதாரவி, சதீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இமான் இசையமைக்க டூட்லி ஒளிப்பதிவு செய்கிறார். தாமரை, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்கள்.
இந்தப் படத்தை ஜெயம் ரவி நடித்த ‘அடங்க மறு’ படத்தைத் தயாரித்த ஹோம் மூவீ மேக்கர்ஸ் சார்பாக சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார்.

படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

Read Previous

வெளியில் இருந்த நான் உள்ளே – யோகி பாபு

Read Next

விஜய் சேதுபதி எழுத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் படம்