சுந்தர் .சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘ஆக்ஷன்’

டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஆக்ஷன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முழு நீள ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறதாம்.

இப்படத்தில் விஷால் மிலிட்டரி கமாண்டோ ஆபீஸராக நடிக்கிறார். ஒரு உண்மையைக் கண்டு பிடிக்க பல நாடுகள் செல்கிறார். அங்கே ஆக்ஷ்ன், சேசிங் என விறுவிறுப்பான ஸ்டன்ட் காட்சிகளை அன்பறிவ் அமைத்துள்ளார்கள். சமீபத்தில் தேசிய விருது பெற்ற இவர்கள் இப்படத்தில் பல வித்தியாமான சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.

இதில் பல காட்சிகளில் விஷால் டூப் போடலாமலேயே நடித்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு துருக்கி, அசர்பைசான், கேப்படோசியா, பாகு, இஸ்தான்புல், தாய்லாந்து நாட்டில் உள்ள கிராபி தீவு, பேங்காக் உள்ளிட்ட இடங்களில் 50 நாள்கள் நடைபெற்றுள்ளன.

மேலும் இந்தியாவில் ஜெய்ப்பூர், ரிஷிகேஷ் ,டேராடூன், ஹைதராபாத், சென்னை, போன்ற இடங்களிலும் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக மலையாளத்தில் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் யோகி பாபு, ராம்கி, சாயாசிங், ஷாரா, பழ .கருப்பைய்யா, பிரபல இந்தி நடிகர் கபீர் சிங் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Read Previous

தமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 16, 2019 வெளியாகும் படங்கள்

Read Next

விஜய் சேதுபதி நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ டீசர்