ரசிகர்களை நம்பி வெளியிடுகிறோம் – கயல் சந்திரமௌலி

2 மூவி பஃப் தயாரிப்பில், சுதர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’.

இப்படத்தில், ‘கயல்’ சந்திரமௌலி, சாட்னா டைட்டஸ், பார்த்திபன், சாம்ஸ், டேணியல் அனி போப், அர்ஜெய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை SDC பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய படத்தின் கதாநாயகன் கயல் சந்திரமெளலி,

‘‘கயல் படத்திற்குப் பிறகு நான் அதிகமாக எதிர்பார்க்கும் படம் எதுவென்று கேட்டால் அது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ தான். என் அண்ணனுக்கு தயாரிப்பில் இது முதல் படம்.

எதை மூடி காண்பிக்கணுமோ அதை மூடித்தான் காட்டணும், எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்துத்தான் ஆக வேண்டும், எதை காண்பிக்க வேண்டுமோ அதை மட்டுமே காண்பிக்க வேண்டும்.

பல இன்னல்களைத் தாண்டி, பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர்.

திட்டம் போட்டு ஒரு கும்பல் உலக கோப்பையைத் திருட நினைக்கிறது. அந்த திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

சினிமா ரசிகர்கள் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி வெளியிடுகிறோம்,” என்றார்.

Read Previous

காப்பான் – விமர்சனம்

Read Next

‘உற்றான்’ தலைப்புக்குப் பல பாராட்டுக்கள்