‘பிகில்’ படத்திற்குப் பிறகு விஜய் நாயகனாக நடிக்கும் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.
இவர் ‘மாநகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தற்போது கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
விஜய்யை முதல் முறையாக இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.
இன்று அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு படம் பற்றிய சில முக்கிய தகவல்களை வெளியிடுகிறார்கள்.
நாளை இந்தப் படத்தின் நாயகி யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம்.
அக்டோபர் முதல் வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.