7 சிஸ் என்டர்டெயின்மென்ட், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘லாபம்’.
இப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டது.
‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஜனநாதன், விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இது.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள்.
சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய படங்களைக் கொடுப்பவரான ஜனநாதன், இந்தப் படத்தின் முதல் பார்வையிலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
போலீசாரின் துப்பாக்கி முனையில் ஒரு இளம் பெண்ணும், குழந்தையுடன் ஒரு பெண்ணும் போராட, பக்கத்தில் ஏர் கலப்பையுடன் விழும் நிலையில் ஒரு பெண்ணிருக்க, அவர்களுக்கு முன்பாக கையில் மைக், ஸ்பீக்கருடன் விஜய் சேதுபதி பேசும் முதல் பார்வை படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.
நடுத்தர வயது தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தில் கலையரசன், ஜெகபதி பாபு, சாய் தன்ஷிகா உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.