ஹிந்தியில் 2012ம் ஆண்டு வெளிவந்து விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்ற படம் ‘விக்கி டோனர்’.
விந்து தானம் பற்றிய கதையைக் கொண்ட அந்தப் படத்தை தமிழில் ‘தாராள பிரபு’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் இந்து கடவுள்களில் மும்மூர்த்திகளில் ஒருவரான படைக்கும் கடவுளான பிரம்மாவை அவமதிக்கும் வகையில் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
இது இந்து மத உணர்வாளர்களை புண்படுத்துவதாக அமைந்துள்ளது.
போஸ்டரில் பிரம்மாவைப் போன்றே படத்தின் நாயகன் ஹரிஷ் கல்யாண் தாமரை மலர் மீது அமர்ந்திருக்க, அவரது மடியில் இரண்டு குழந்தைகள், நான்கு கைகளில் மூன்று குழந்தைகள் இருப்பது போலவும், ‘பிரபு’ என்ற எழுத்தில் விந்து படத்தையும் வைத்து டிசைன் செய்துள்ளார்கள்.
சினிமாவை விளம்பரப்படுத்த சமீப காலங்களில் தங்கள் கதைகளை விடவும் சர்ச்சையை ஏற்படுத்தினால் அது பரபரப்பாகப் பேசப்படும் என்ற ரீதியில் இப்படி செய்வது வழக்கமாகிவிட்டது.
போஸ்டரிலேயே இப்படி என்றால் இன்னும் படத்தில் எவ்வளவு ‘வேலைகளை’ செய்வார்களோ ?.