இஞ்சி வெல்லம் – வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் திரைப்படம் ‘இஞ்சி வெல்லம்’. இப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள இப்படம், காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கன்னட நடிகை சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான பிட் டிராக் பாடலுடன் கூடிய கிளிம்ப்ஸ் வீடியோவில் கொல்கத்தாவின் பின்னணியில் அமைந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் பாடல்கள், இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

மக்கள் காவலன் – முதல் பாடல் வெளியீடு

Read Next

தெருக்குரல் அறிவு நடிப்பில் ‘ஹலோ’ இசை ஆல்பம்