பேமிலி பாய் – டீசர் வெளியீடு

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட மிதுன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்துள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

மெக்கானிக் பிக்சர்ஸ் சார்பில் மிதுன் மாணிக்கம், மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP சார்பில் முஹம்மத் கனி பைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

மிதுன் மாணிக்கம் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார், நிகிலா சங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிர்மல் JP இசையமைத்துள்ளார். ஜிஜேந்திரன் V படத்தொகுப்பையும், C. K. முஜிபுர் ரஹ்மான் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.

2020-ஆம் ஆண்டு ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி, பேமிலி டிராமா, ஆக்‌ஷன், திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.

டிசம்பர் 11-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர், காணாமல் போன ஒரு பொருளைத் தேடி நாயகன் மேற்கொள்ளும் ஒருநாள் பயணத்தை மையமாகக் கொண்டுள்ளது.

பலூன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிடுகிறது.

Read Previous

‘மூக்குத்தி அம்மன் 2’ டிரைலர்