விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜமா’ படத்தை இயக்கி, நடித்த பாரி இளவழகன் அடுத்து நடித்து இயக்கியுள்ள படம் ‘அன்பே டயானா’.
படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த டிரைலர் யூடியூப் தளத்தில் வெளியானதும் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். பரத் சங்கர் இசை அமைத்துள்ளார்.
பெரம்பூரைச் சேர்ந்த தெலுங்கு பேசும் இளைஞனுக்கும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கும் இடையிலான காதல் கதை சித்தரிக்கப்படுகிறது. இரு குடும்பங்களின் எதிர்ப்பு, மத மாற்றம் தொடர்பான சிக்கல்கள் நகைச்சுவை கலந்த குடும்பப் பின்னணியில் இடம்பெற்றுள்ளன.
வரும் ஜூலை 17 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
தயாரிப்பு நிறுவனங்கள்: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & இரா என்டர்டெய்ன்மெண்ட்
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், இரா சரவணன் & யுவராஜ் கணேசன்
இயக்கம் : பாரி இளவழகன்
இசை: பாரத் சங்கர்
ஒளிப்பதிவு: ஷெல்லி காலிஸ்ட்
படத்தொகுப்பு: பார்த்தா
கலை இயக்குநர்: மகேந்திரன்
நடிப்பு : பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன், பரிதாபங்கள் கோபி மற்றும் பலர்.