ஜெய் ஹனுமான் – பூஜையுடன் ஆரம்பம்

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற ‘ஹனு மான்’ திரைப்படத்தின் அடுத்த தொடர்ச்சியாக உருவாக உள்ள ‘ஜெய் ஹனுமான்’ படம் பூஜையுடன் துவங்கியது.

இந்தப் படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க, டி- சீரிஸ் நிறுவனம் இப்படத்தை வழங்குகிறது. ரிஷப் ஷெட்டி இந்தப் படத்தில் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஹனுமான் பிறந்த புனிதத் தலமாக நம்பப்படும் கர்நாடக மாநிலம் ஹம்பி, விஜயநகரில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பாரம்பரிய பூஜையுடன் படம் துவங்கப்பட்டது. டி-சீரிஸ் நிறுவனத் தலைவர் பூஷன் குமார் கிளாப் அடித்து துவக்கி வைக்க, அனில் ததானி கேமராவை இயக்க, முதல் ஷாட்டை ’ஹனு மான்’  படத்தின் ஹீரோ தேஜா சஜ்ஜா இயக்கினார். மேலும், அனில் ததானி, பூஷன் குமார், நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் ஆகியோர் இணைந்து திரைக்கதை புத்தகத்தை இயக்குநர் பிரசாந்த் வர்மாவிடம் கொடுத்தனர். படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வழக்கமான படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

கடவுள் ஹனுமானாக ரிஷப் ஷெட்டி இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த கதாபாத்திரத்தில் சக்திவாய்ந்த, ஆழமான, ஆன்மிக அனுபவத்தைத் தரும் வகையில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது தோற்றத்தை கட்டமைத்துள்ளார் ரிஷப் ஷெட்டி.  

‘ஜெய் ஹனுமான்’ கலியுகத்தை பின்னணியாகக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது. ஹனுமானின் ’மௌனம் உன்னதமான நோக்கத்தை குறிக்கிறதே தவிர அது சரணாகதி அல்ல, எழுச்சி’ என்பதை படம் மையக்கருவாகக் கொண்டிருக்கிறது. பக்தி, நம்பிக்கை, சக்தி ஆகியவற்றை ‘ஜெய் ஹனுமான்’ படம் பிரதிபலிக்கும்.

Read Previous

‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Read Next

தாய் கிழவி – முன் வெளியீட்டு நிகழ்வு