கவினின் அடுத்த பட அப்டேட்

கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் திட்டம் என்னவென்று தெரியவந்துள்ளது.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்க்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கவின். அதற்குப் பிறகு அவருடைய அடுத்த படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகாமல் இருந்தது. தற்போது ஜூலை 22-ம் தேதி கவினின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தினை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்கவுள்ளார். இதில் கவினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார்.

சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு 14 நாட்கள் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் ஒப்பந்தம் முடிந்தவுடன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இந்தாண்டு முடிவிற்குள் படத்தினை முடித்து, அடுத்தாண்டு ஜனவரி இறுதியில் வெளியிடலாம் எனவும் திட்டமிட்டுள்ளது படக்குழு.

Read Previous

மகேஷ் பாபுவுக்கு வாத்தியாராக நாசர்

Read Next

“ஒவ்வொரு வாய்ப்பும் தேவதை தான்” – ‘பன் பட்டர் ஜாம்’ விழாவில் ராஜு

Most Popular