மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்துக்காக வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார் நாசர்.
ராஜமெளலி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் மகேஷ் பாபு. இந்தியாவிலேயே அதிகப் பொருட்செலவில் உருவாகும் படமாக இது உருவாகவுள்ளது. இதற்கான நடிகர்கள் ஒப்பந்தம் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் வில்லனாக பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, தன்னுடைய படங்கள் அனைத்துக்குமே கதையின் தன்மைக்கு ஏற்ப நடிகர்களுக்கு வகுப்பு எடுக்கப்படும். அப்போது தான் நடிகர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் எளிதாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்துக்கு மகேஷ் பாபுவுக்கு வாத்தியாராக பணிபுரிந்து வருகிறார் நாசர்.
இந்தப் படத்தின் வசன உச்சரிப்பு, நடை உள்ளிட்டவற்றை மகேஷ் பாபுவுக்கு நாசர் சொல்லிக் கொடுத்து வருகிறார். இந்தாண்டிற்குள் படப்பிடிப்பு தொடங்க படக்குழு பணிபுரிந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளிட்டவை விரைவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.