ரஜினிக்கு வில்லனாக நாகார்ஜுனா

’கூலி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நாகார்ஜுனா நடிக்கவுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ஜூலை முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தற்போது இறுதி திரைக்கதையில் இருந்து படப்பிடிப்பு திட்டங்களைப் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் ஹைதராபாத், பின்பு சென்னை என்பது இப்போதைக்கு முடிவாகி இருக்கிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

‘கூலி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நாகார்ஜுனா நடிப்பது உறுதியாகியுள்ளது. இதில் ரஜினிக்கு இரண்டு வில்லன்கள், நாகார்ஜுனா மற்றும் ஃபகத் பாசில். இதில் முக்கிய வில்லனாக நாகார்ஜுனாவும், அடுத்து ஃபகத் பாசில் இருப்பது போன்று கதையை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதில் ரஜினி மற்றும் நாகார்ஜுனா இருவரும் பங்குபெறும் விமான சண்டைக்காட்சி ஒன்றிணை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Read Previous

மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – எஸ்.ஜே.சூர்யா

Read Next

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் நேசிப்பாயா

Most Popular